| |
|
|
|
|
|
|
|
|
Yahoo! Tamil |
| |
 'பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இல்லை' |
| நிதி நிலை இடமளிக்காத காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற முடியாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். |
|
 மாணவி கொலை: தொழிலாளிக்கு தூக்கு |
| சென்னை: மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளிக்கு சேலம் அமர்வு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. |
|
 சிறிலங்கா ஊடகப் பழிவாங்கலை நிறுத்த... |
| ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பழிவாங்குவதை நிறுத்துமாறும், அவர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்க அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பும், மனித உரிமை கண்காணிப்பகமும் கேட்டுக்கொண்டுள்ளன. |
|
 ரஜினி படத்துக்கு எதிராக வழக்கு |
| தங்களுக்கு தர வேண்டிய 11.59 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தாத வரை ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தை வெளியிட ஆக்கர் ஸ்டுடியோவை அனுமதிக்கக் கூடாது என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. |
|
 ஆங்கிலப் படத்திலிருந்து திலகனுக்கு கல்தா |
| Dam 999 என்ற ஆங்கிலப் படத்தில் விமலா ராமன், வினய் உள்பட ஏராளமான தமிழ், மலையாள திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் கதை இந்தியாவை மையப்படுத்தியது என்பதே இந்த நட்சத்திரத் தேர்வுக்கு காரணம். |
|
 ஐ.பி.எல். - செய்தி சானல்கள் பிரச்சனை தீர்ந்தது |
| ஐ.பி.எல். நிர்வாகக் குழு கடினமான நிபந்தனைகளை விதித்ததால் 3-வது ஐ.பி.எல் தொடரை செய்தி சானல்கள் புறக்கணிப்பு செய்வதாய் அறிவித்திருந்தது. தற்போது இருதரப்பினரிடையேயும் சமாதானம் ஏற்பட்டுள்ளதால் புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது. |
|
 கண்களைப் பாதுகாப்போம் |
| வாரத்தில் ஐந்து நாட்களாவது தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். இது, குளுகோமா கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஐந்து நிமிடம் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. கண்களை இடது - வலது புறமாகவும், மேலே - கீழேயும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். இப்படி செய்வதால் குளுகோமா கோளாறு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. 50 வயதைத் தாண்டியவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கின்றவர்கள் ஒவ்வொரு மாதமும் பரிசோதனை செய்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம். சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு உண்டாகிற வறட்சியால் கண்களைப் பாதுகாப்பதற்காக சன் க்ளாஸ் அணிந்து கொள்ளலாம். நீச்சல் செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில், இது குளோரினில் இருந்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. |
|
 பொன்னாங்கண்ணியின் மகிமை |
| பொன்னாங்கண்ணிக் கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தங்கச்சத்து, இரும்புச் சத்து ஆகியவையும் உள்ளது.வாரத்தில் ஒரு நாளாவது பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தாலே அதிலுள்ள பலன்கள் நமது உடலுக்குக் கிட்டும்.பொன்னாங்கண்ணிக் கீரையை நாம் உணவில் அவ்வப்போது சேர்த்து வந்தால் கண்களுக்கு நல்லது. பார்வைக் குறைபாடுகள் கூட தொடர்ந்து பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.மேலும், பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலானது தங்கம் போன்ற மினுமினுப்பு பெறும். சிறிய வயதிலேயே முதுமையான தோற்றம் பெற்றவர்கள் பொன்னாங்கண்ணியை சாப்பிட்டு வர நல்ல மாற்றம் பெறலாம்.மூல நோய் உள்ளவர்களும், உடல் சூடு கொண்டவர்களும் பொன்னாங்கண்ணிக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது சமைத்து சாப்பிட்டு வர பிரச்சினை குறையும். |
|
 மார்ச் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28 |
| 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். |
|
 மார்ச் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29 |
| 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும். அழகு, இளமை கூடும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு தேவையான அளவு இருக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. |
|
 நிஃப்டி 04 புள்ளி உயர்வு |
| காலையில் உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை, படிப்படியாக குறைந்து 1 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தது. பிறகு சிறிது அதிகரித்தது. வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 01.34 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 17,166.62 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 03.60 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5137.00 ஆக அதிகரித்தது. மிட்கேப் 15.25, சுமால் கேப் 37.84, பி.எஸ்.இ 500-03.96 புள்ளிகள் குறைந்தது. |
|
 விண்ணைத்தாண்டி வருவாயா |
| காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக.கார்த்திக் (சிம்பு) சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி. ஸ்லோமோஷனில் ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்ரிஷா) பார்த்ததும் கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார். பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்தத் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம். |
|
|
|
|
|
|
|
|
|
|